அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடித்து வரும் ஆத்தூர் தாலுகா பகுதி மக்கள்

தற்போது நாட்டில் கொரொனா தொற்று நோய் பரவிவரும் நிலையில்தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவு அமுலில் உள்ளது.இருப்பினும் மக்களின் அத்யாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு சிறு சிறு தளர்வுகளுடன் தொழிற்சாலைகள் வியாபார ஸ்தாபனங்கள் இயங்கி வருகிறது. ஜீலை மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக் கிழமை நாட்கள் முழுவதிலும்முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது.அதை கடைபிடிக்கும் விதமாக ஜீலை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை நாளான இன்றுதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான ஆத்தூர்,அய்யம்பாளையம்,செம்பட்டி, சின்னாளபட்டி,சித்தரேவு ஆகிய பகுதிகளில் வியார ஸ்தாபங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுதமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை ஆத்தூர் தாலுகா பகுதி மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!