கிருட்டிணகிரி மாவட்டம் தளி பகுதியில் இருந்து உற்பத்தியாகும் சின்னாறுஆற்றின் மேலகிரியும், ஊடேதுர்க்கம் மலைகளும் ஆற்றுக்கு நெருங்கி இருக்கும் பஞ்சப்பள்ளியில் கட்டப்பட்ட சின்னாறு அணையாகும். இந்த அணை 1977இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள். நீர்பிடிப்பு பரப்பு 420ஏக்கர் , மொத்த கொள்ளவு 50 அடியாகும். இந்த அணையின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 5000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையின் மூலம் பஞ்சப்பள்ளி ஏரி, பெரியானூர் ஏரி, அத்திமுட்லு ஏரி, செங்கன்பசுவன்தலாவ் ஏரி, தும்பலஹள்ளி அணை, கடத்தூர் ஏரி, ராமக்கா ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பும். சின்னாற்றின் மூலம் பாலக்கோடு, பென்னாகரம் தாலுகா பகுதியில் பாசன நீர் தேவை மற்றும் குடிநீர் நீர் ஆதாரமாக உள்ளது. தர்மபுரி நகராட்சி பகுதிக்கு பஞ்சப்பள்ளி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு சின்னாற்று நீர் பெரும் அளவில் கை கொடுத்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் அணையில் இருந்து வருடதோரும் சுமார் 5டிஎம்சி தண்ணீர் வழிந்தோடி சின்னாற்று பகுதியான சுமார் 40கி.மீ தூரம் வரை எந்த ஒரு தடுப்பணையும் இல்லாததால் பென்னாகரம் காட்டுபகுதியில் நூழைந்து ஒகேனக்கல் ஆற்றில் கலந்து பின்பு வீணாக கடலில் கலக்குகின்றது.மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்காளக பருவமழை குறைவால் நிலத்தடிநீர் மட்டம் 1500அடிக்கும் கீழ் சென்று உள்ளது. மேலும் சுமார் 1லட்சும் ஏக்கர் விவசாய நிலம் தரிசு நிலங்ளாக மாறி உள்ளது. விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட இம்மாவட்டத்தில் விவசாயம் பொய்து போனதால் பெரும்பாலன விவசாயிகள் கூலி வேலைக்கு வெளியூர்களுக்கு தினதோரும் சென்று வரும் அவல நிலை உள்ளது. இதனால் விவாயிகள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்தும், நீண்ட பயிர்களான தென்னை, மா, பாக்கு போன்றவை முழுமையான அழிந்து உள்ளதால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது.
எனவே தமிழக அரசு நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் உபரிநீரை சேமிக்க அணையின் நீர்மட்டத்தை 50அடியிலிருந்து 100அடியாக உயர்த்தினால் கூடுதல் நீர்சேமிக்கவும் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே தமிழக அரசு பொதுபணிதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









