தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள , வியாபார நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் அதிகம் உள்ள தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் அருகில் டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் ,இந்த பகுதி பொதுமக்களுக்கும் , வியாபாரிகளுக்கும் இடையூறாக இருப்பதோடு மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது .பொதுமக்களும், வியாபாரிகளும் தொடர்ச்சியாக இந்த மதுபான கடையை மாற்ற வேண்டுமென கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில் மேற்கண்ட மதுபான கடை இதுவரை மாற்றப்படவில்லை.எனவே பொதுமக்களுக்கு இடையூறான மேற்கண்ட தஞ்சாவூர் கீழவாசல் பகுதி டாஸ்மார்க் கடையை உடனடியாக அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர நிர்வாகிகள் ஜே .காதர் உசேன் ,ஆலம்கான் ,சதாசிவம், பாலச்சந்தர், சேகரித்து அப்துல்லா பாலச்சந்தர் பிரவீன் சாகுல் குமார் மற்றும் மாவட்டத் தலைவர் காரல் மார்க்ஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்,

You must be logged in to post a comment.