கீழக்கரை நகரில் எலும்புக் கூடாய் காட்சியளிக்கும் அபாய மின் கம்பங்கள் – உடனடி நடவடிக்கை கோரி ‘சட்டப் போராளிகள்’ மனு

கீழக்கரை நகரில் மக்கள் நெருக்கமாக வாழும் பல்வேறு தெருக்களில் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களால் உயிர் பலி ஏற்படும் அபாய சூழல் நிலவுகிறது. 35 ஆண்டுகள் பழமையான பல மின் கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

குறிப்பாக சின்னக்கடை தெருவில் இருந்து கோக்கா அஹமது தெரு செல்லும் சாலையில், வீட்டின் முன்னதாக முறிந்து விழும் நிலையில் நிற்கும் ஆபத்தான மின்கம்பம், லெப்பை தெரு பெண்கள் மதரஸா செல்லும் சாலையில் இருக்கும் அபாய மின் கம்பம் எண் : 10/13 ,

தச்சர் தெருவிலிருந்து பழைய மீன் மார்க்கெட் செல்லும் சாலையில் இருக்கும் அபாய மின் கம்பம் எண் : 8/9, பழைய குத்பா பள்ளிவாசல் நுழைவுவாயிலில் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் அபாய மின் கம்பம் எண் : 9/11, வள்ளல் சீதக்காதி சாலை யூசுப் சுலைஹா மருத்துவமனையி இருந்து சேரான் தெருவிற்கு செல்லும் பாதையில் இருக்கும் அபாய மின் கம்பம் எண் : 7/1 உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட அபாய மின் கம்பங்கள் உள்ளது.

இதனால் இந்த பகுதியில் குடியிருப்பவர்களும், இந்த பாதையை கடந்து செல்லும் பள்ளி செல்லும் சிறார்களும், பொதுமக்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து கடந்த மாதம் சம்பந்தப்பட்ட கீழக்கரை மின்சார வாரிய செயற் பொறியாளரிடம் முறையாக மனு அளித்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமம் சார்பாக 70 க்கும் மேற்பட்ட ஆன் லைன் பெட்டிசன்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு  செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும் இது சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகமும், மின்சார வாரியமும் அவசர அவசியம் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா..? மின்சார வாரியம் மெத்தனப்போக்கை கைவிட்டு பொதுமக்களின் அச்சத்தை போக்குமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “கீழக்கரை நகரில் எலும்புக் கூடாய் காட்சியளிக்கும் அபாய மின் கம்பங்கள் – உடனடி நடவடிக்கை கோரி ‘சட்டப் போராளிகள்’ மனு

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!