கீழக்கரை வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா மணல் மேடு அருகாமையில் கடந்த மாதம் மணல் ஏற்றி வந்த லாரியொன்று எதிர்பாராத விதமாக காவிரி கூட்டுக் குடிநீர் ஜங்க்சன் மூடியை உடைத்து கொண்டு பின் சக்கர டயர் உள்ளிறங்கியது. இந்த விபத்தில் உடைந்த தரமற்ற மூடிக்கு பதிலாக இன்று வரை புதிய தரமான மூடி போடப்படாமல் உள்ளது.

இதனால் இந்த பகுதியில் நடமாடும் சிறுவர்களும், இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த அபாய பள்ளம் சாலை வளைவில் உள்ளதால் அதிக கவனம் செலுத்தி நடமாடும் நிலை உள்ளது. எனவே உடனடியாக இந்த இடத்தில் புதிய தரமான மூடியை அமைத்து தர இப்பக்தி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



One thought on “கீழக்கரை மணல் மேடு அருகே மூடியில்லாத அபாய குழி – வாகன ஓட்டிகள் உஷார்..”
Comments are closed.