கீழக்கரை மக்களின் உயிர் மீது அக்கறை கொள்ளுமா நகராட்சி நிர்வாகம்….?

கொரொனொ வைரஸ் இரண்டாம் அலை காரணமாக போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுதான் உள்ளதே தவிர இன்னும் நீக்கப்படவில்லை, ஆனாலும் பொதுமக்கள் கவனக்குறைவினால் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளது என அரசு எச்சரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் ஜிகா வைரஸ் மற்றும் கொரோனோ தொற்று அதிகமாக இருக்கும் மாநிலமான கேரளாவில் இருந்து அதிகமான யாத்ரீகர்கள் கீழக்கரைக்குள் எந்த சோதனையும் கட்டுப்பாடுகளும் இல்லாத வண்ணம் தினமும் வந்து செல்கிறார்கள்.  நகராட்சி நிர்வாக அதிகாரிகளின் பார்வை படாமல் நிச்சயமாக வெளி மாநில வாகனங்கள் நிச்சயமாக வரவும் முடியாது, நுழைவு கட்டணம் வசூல் செய்யாமலும் உள்ளே நுழைந்து விட முடியாது.  வசூலில் கவனம் செலுத்தும் அதிகாரிகள் இவ்வாறு ஊருக்குள் நுழையும் வாகனங்களால் கீழக்கரை மக்களுக்கு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு தடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!