இன்று (27.05.2018) ஞாயிறு, மாலை சவூதி அரேபியா தம்மாம் மாநகர் ரோஸ் ரெஸ்டாரண்ட் ஆடிட்டோரியத்தில் வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சார்பில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாழ்த்துரை வழங்கிய வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி சர்வீஸ் பொது மேலாளர் திரு என்னும் திருஞான சம்பந்தம் முஸ்லிம்களின் நோன்பு என்பது ஈகையை உணர்த்தும் ஒரு அரிய நிகழ்வாகும் என குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து அசோக் லேலண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் துணை பொது மேலாளர் உமா சங்கர் தனது கருத்துரையில் தாம் ஒரு வாகன விபத்தில் சிக்கி கொண்டதை நினைவு கூர்ந்தார், அவர் கூறியதாவது: தான் ஒரு விபத்தில் சிக்கிய பொழுது பலர் விபத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு இஸ்லாமிய நண்பர் ஓடி வந்து என்னை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்து எனது பெற்றோர் வரும் வரை அருகில் இருந்து கவனித்தார். அந்த இஸ்லாமிய நண்பரின் உரிய நேரத்திலான உதவியால், நான் இன்று உடல் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டவர், இரக்கமும் ஈகையும் தான் முஸ்லிம்களின் உன்னதமான சொத்து என்று பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டார்.
மேலும் அசோக் லிலேண்ட் கம்பெனியின் துபாய் டிவிஷன் மேலாளர் வாயல் அவர்கள் தனது உரையில் நோன்பு என்பது ஒரு மனிதனின் குணங்களை மேன்மைபடுத்துவதற்கும், அழகிய பண்புகளை வார்த்தெடுப்பதற்கும் உரிய பயிற்சியாகும் என குறிப்பிட்டார். மேலும் இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய சகோதரர்களையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி சகோதரத்துவத்தை வெளிக்கொணர்ந்த வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனியின் நிர்வாகத்திற்கும், பொது மேலாளருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக நோன்பின் மாண்பு என்னும் தலைப்பில் கீழை ஜஹாங்கீர் அரூஸி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாத் பிரமுகர்கள் கரீம்பாசிர், தொண்டியப்பா என்னும் அபுபக்கர், தாஜுல் ஆரிபீன், அப்துல் ரவூப், ஸ்பேர் பார்ட்ஸ் மேலாளர் சம்பத், சர்வீஸ் மேலாளர் வெங்கடேஷ் மற்றும் வெஸ்டர்ன் ஆட்டோ மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












