தரமில்லாமல் கட்டப்பட்டு தேய்ந்து போன ஜெட்டி பாலம் – தெளிவாக தெரியும் ஊழல் பெருச்சாளிகளின் கால் தடம்

கீழக்கரையில் மீன் வள துறையின் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ஜெட்டி பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்த புதிய பாலத்தின் கட்டுமானப் பணி 2011 ஆம் ஆண்டு துவக்கத்தில் முழுமையாக நிறைவடைந்து.

இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, சமூக ஆர்வலர்கள் பலரும், பாலத்தின் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டினார். ஆனால் அப்போதைக்கு ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்த அதிகார வர்க்கம் மக்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்கவில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே, இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஊழல் பெருச்சாளிகள் புகுந்து விளையாடியதன் கால் தடம், தெள்ள தெளிவாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

இது குறித்து சட்டப் போராளி அபு பைசல் கூறுகையில் ”ஒப்பந்தப்படி முறையான சதவீதத்தில் கலவை போடாமல் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலத்தில் லேசாக கால் கட்டை விரை வைத்து கிளறினாலும் பெரிய பள்ளத்தை தோண்டி, சாமானியனால் கின்னஸ் சாதனை படைத்து விட முடியும்.

அந்த அளவிற்கு தரமில்லாத பணிகள் நடைபெற்று இருக்கிறது. இது குறித்து மீன் வள துறை அமைச்சகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்தினருக்கும் கீழக்கரை சட்ட போராளிகள் தளம் சார்பாக புகார் மனு அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!