சோழவந்தான் அருகே திருவேடகத்தில் சாலையின் நடுவே முழங்கால் அளவு ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் திருவிடகம் ஏடகநாதர் கோவில் நுழைவாயில் முன்பு சாலையின் நடுவில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது இதன் அருகிலேயே வைகை அணைகளில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் பைப்புகள் செல்கிறது இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் குடிநீர் பள்ளத்திற்குள் விழுந்து சாலை முழுவதும் தண்ணீர் செல்கிறது மேலும் பள்ளம் இருப்பதும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை ஆகையால் இந்த பகுதியில் வரும் வாகனங்களில் செல்பவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்கச் செல்லும் பொதுமக்கள் ஆகியோர் அடிக்கடி விபத்தில் சிக்கும் அவலம் ஏற்படுகிறது இது குறித்து பொதுமக்கள் அதிகாரியிடம் பலமுறைதகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளத்தின் அருகில் உள்ள அரசுபள்ளியில் இருந்து சென்ற குழந்தைகள் பள்ளத்திற்குள் விழுந்து சென்ற அவலம் ஏற்பட்டது அருகில் இருந்த சமூக ஆர்வலர்கள் உடனடியாக இரண்டு கல்லை எடுத்து பள்ளத்தின் அருகில் வைத்து சிவப்பு கொடியை அதில் எச்சரிக்கைகாக ஊண்டி வைத்துள்ளனர் நெடுஞ்சாலைத்துறை இதுகுறித்து எந்த கவலையும் படுவதில்லை இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு பணிகளை முடித்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது ஆகையால் நிரந்தரமாக இந்த பள்ளத்தை சரி செய்து பொதுமக்கள் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்

You must be logged in to post a comment.