முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நாளை (15.9.2018) மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.
இராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டு அரங்கம் முன்பு காலை 7:00 மணிக்கு துவங்கும் போட்டியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைக்கிறார். இப்போட்டியில் 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மூன்று பிரிவாக பங்கேற்க வேண்டும். சொந்த செலவில் இந்தியாவில் தயாரான சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வயது சான்றுடன் வர வேண்டும்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்..ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடிப்போருக்கு பரிசு வழங்கப்படுகிறது முதல் 10 இடம் பெறுவோருக்கு தகுதிச்சான்றுகள் வழங்கப்படுகிறது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










