கீழக்கரையில்ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார்
கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கினை வைத்திருக்கும் கீழக்கரை மேலத் தெருவை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி ரூ.50000 ஐ ஆன்லைன் மூலம் திருடியுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ”கடந்த ஒரு வாரம் முன்னதாக எனது மொபைலுக்கு பேசிய ஆசாமி.. தான் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும், வங்கி ATM கடந்த நான்கு மாதங்களாக உபயோகிக்காததால், ATM நம்பர், OTP மெசேஜ், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை தருமாறும் கேட்டனர். அதனை நம்பி அனைத்து விபரங்களையும் சொன்னேன். அடுத்து இரண்டு நாள் கழித்து அக்கௌன்ட் பேலன்ஸ் வங்கியில் பார்த்த போது ரூ.50000 குறைத்துள்ளது. ஒரே நாளில் மூன்று முறை எனது ATM விபரங்களை உபயோகித்தது பணத்தை திருடியுள்ளனர்.” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக தற்போது கீழக்கரை DSP மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை வழங்கி, அட்வகேட் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி யாசீன், கீழக்கரை நகர் செயலாளர் முஹைதீன் இபுறாகீம் சமூக ஆர்வலர் காதர் முஹைதீன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அட்வகேட் சலீம் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்த பேட்டியில் ”இனி வரும் காலங்களில் எல்லாமே ஆன்லைன் பணபரிமாற்றமாக இருப்பதனால் பொதுமக்கள் மிக கவனமாக வங்கி கணக்கு விஷயங்களை கையாள வேண்டும். யாராவது உங்களை மொபைலில் தொடர்பு கொண்டு வங்கி கணக்குகள், பாஸ்வேர்டு போன்ற விபரங்களை கேட்டால் எக்காரணத்தை கொண்டும் கொடுக்க கூடாது. எந்த ஒரு வங்கியும் தன்னுடைய வாடிக்கையாளர் ATM கார்டு, வங்கி பண பரிவர்த்தனை குறித்த விபரங்களை கேட்பது கிடையாது. அது போல் யாராவது தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக அந்த போன் நம்பரை குறித்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், சம்பந்தப்பட்ட வங்கிக்கும் புகார் அளிக்க வேண்டும். ஆகவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வோடு செயல்பட்டு இது போன்ற ஆன்லைன் திருட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

இன்று இந்திய நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா என்று கூக்குரல் போட்டு கொண்டு இருக்கும் பொழுது அந்த டிஜிட்டல் உலகத்தின் சாதகங்களை மட்டுமே எடுத்துரைப்பதில் அரசாங்கம் மும்முரம் காட்டுகிறது, ஆனால் அதனுடைய மற்றொரு சாத்தியங்களை மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமை. அவ்வாறு முறையான விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில் மக்களும் இது போன்ற டிஜிட்டல் திருடர்களிடம் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.
்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Waiting for more crimes…
This modi’s Ditigial India…