பெண்களுக்கு எதிரான இணையதள குற்றம் மற்றும் தண்டனைச் சட்டம் என்ன?

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒரு பங்களிப்பாக இருப்பதால் ஆண்களுக்கு பெண் குறைந்தவள் இல்லை என்று காட்டும் வகையில் பெண்கள் அவர்களுடைய தனித்திறமையை காட்டி முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.

இருந்தாலும் பெண்கள் ஒதுக்கப்பட்டாலும் பெண்கள் இணையதளத்தில் மிரட்டப்படுகிறார்கள் இனி அப்படி பயந்து வாழ தேவையில்லை இந்த சட்டங்கள் நிறைய இருக்கிறது அதை பற்றி தான் தொடர்ந்து தெரிந்து கொள்ளப்போகிறோம்.

இன்டர்நெட் மூலம் பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படக்கூடிய குற்றங்கள் பெருகிவருகிறது அந்த குற்றங்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் என்னவென்று இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

பெண்களுக்கு எதிரான இணையதள குற்றம் மற்றும் தண்டனைச் சட்டம் என்ன?

இணையதள குற்றங்களுக்கு IT சட்டம் என்ன தண்டனையை வழங்குகிறது?

IT Act சட்டம் எங்கெல்லாம் செல்லுபடியாகும்?

IT சட்டம் சட்டத்தின் அடிபடையில் பெண்கள் மட்டும் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?

பெண்களுக்கு எதிரான இணையதள குற்றம் மற்றும் தண்டனைச் சட்டம் என்ன?

பெண்களே உங்களுடைய முக நூல் இன்பாக்ஸில் Facebook ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, whatsapp பெண் சமூக வலைதளங்களில் மசாஜ் அனுப்பினாலும், ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ, ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, தயங்காமல் உங்கள் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மாதிரியான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள குற்றங்களுக்கு IT சட்டம் சட்டமே தண்டனை வழங்குகிறது இந்த IT சட்டம் என்பதற்கான முழு அர்த்த தகவல் தொழில்நுட்ப சட்டம் என்பதாகும்.

இணையதள குற்றங்களுக்கு IT சட்டம் என்ன தண்டனையை வழங்குகிறது.

Fake Id மூலமாக உங்களை இணையதளத்தில் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார் என்றால் அதற்கு IT Act பிரிவு 66A மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

ஃபேக் மெசேஜ், பேக் அக்கவுண்ட்,மூலமாக உங்களுக்கு தவறான தகவல்களை அனுப்பி இருந்தாலோ, தவறாக உங்களிடம் நடந்து கொண்டாலோ, தவறான பரிவர்த்தனையை மேற்கொண்டாலோ, இந்த சட்டத்தின் படி தண்டனை வழங்கப்படும். இந்த குற்றத்தை செய்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்களைப்பற்றி தரங்குறைவாக முகநூலிலோ அல்லது இணையதளங்களிலோ போட்டிருந்தால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 மூலமாக நடவடிக்கை எடுக்கலாம். இந்த குற்றத்தை செய்த நபருக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த மாதிரியான இணையதள குற்றங்களுக்கு ஆதாரமாக அவர்கள் பதிவிட்ட அந்த இணையதள போஸ்டை ஸ்க்ரீன் ஷாட் (ஸ்கிரீன் ஷாட்) செய்து வைத்துக்கொள்ளுங்கள் உங்களது புகார் மனுவோடு இந்த ஆதாரங்களை இணைத்து புகாரை கொடுக்கும் போது காவல்துறை அதிகாரி விரைந்து எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

தவறான எண்ணத்தோடு உணர்வுபூர்வமான ஆபாசமாக தொல்லை கொடுக்கும் வகையில் இணையதளத்தில் பதிவுகள் பதிவிட்டிருந்தால் இந்த குற்றத்தை செய்த நபருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

உங்களுடைய புகைப்படங்களை இன்னொருவர் ஷேர் (பங்கு) செய்து தரக்குறைவாக விமர்சித்து இருந்தாலோ, ஆபாசமான வெப் சைட்களில் இணையதளம் உங்கள் புகைப்படங்களை போட்டிருந்தாலோ, IPC பிரிவு 499 படி ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை குற்றவாளிக்கு கிடைக்கும்.

IT Act சட்டம் எங்கெல்லாம் செல்லுபடியாகும்.

இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லுபடியாகும். மேலும் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்த குற்றத்தை புரிந்தால் அவர்களுக்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 188 படி (crpc பிரிவு 188) மேற்சொன்ன சட்டப்பிரிவுகளில் உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.

IT சட்டம் சட்டத்தின் அடிபடையில் பெண்கள் மட்டும் தான் வழக்கு பதிவு செய்ய முடியுமா?

இல்லை இந்த சட்டம் ஆண்,பெண் இருபாலருக்கும் சமமான சட்டமாகும். இரு தரப்பினரும் இந்த சட்டத்தின் அடிபடையில் புகார் அளிக்கலாம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!