சினிமாவில் பெரிய ஹீரோவாக நடித்துவிட்டால், அனைத்தையும் செய்துவிட்டார்கள் என்று மக்கள் கருதிவிட மாட்டார்கள்! முதலில் ஒரு கவுன்சிலராக வாங்க அப்புறம் பேசலாம்!-சி.வி.எம்.பி.எலிழரசன் காட்டம்..

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு உழைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பிரச்னைகளை சரி செய்து, மக்களாட்சியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறது.

பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், திருநங்கைகள், விவசாயிகள், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அனைவருக்குமான அரசாக திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் மேலும் சிறப்பு அந்தஸ்தை பெற்று வருகிறது. இருப்பினும் எதாவது குறை சொல்ல வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வதந்தி பரப்ப முயன்று வருகின்றனர். அதையெல்லாம் முறியடித்து முன்னோக்கி செல்கிறது இந்த திராவிட மாடல் அரசு.

அந்த வகையில் புதிதாக அரசியல் கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், வழக்கம்போல் தமிழ்நாட்டில் திமுக அரசை விமர்சித்தால்தான் பிழைக்க முடியும் என்ற கணக்கில், வேண்டுமென்றே குறை கூறி வருகிறார். மேலும் “மக்களுக்காக மக்களுக்காக” என்று கூறி, மக்களுக்காக களத்தில் இல்லாமல், சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.

அண்மையில் ஏற்பட்ட ஃபெங்கல் புயல் பாதிப்பின்போதும் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். இதைத்தொடர்ந்து ஷூட்டிங் முடித்து திரும்பிய அவர், மழை – வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆராயாமல், மக்களுக்கு நேரில் சென்று உதவாமல், பனையூரில் தனது அலுவலகத்துக்கு, பேருக்கு என்று சிலரை வரவழைத்து நிவாரண உதவிகள் வழங்குகிறோம் என்று பெயரில் வழங்கினார் நடிகர் விஜய்.

இப்படிபட்ட ஒருவர் பேசுவதற்கு தகுதி இல்லாத ஒருவர் திமுக அரசை பற்றி மேலும் தற்போது குறை கூறி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது நேற்று (டிச.06) அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், திமுக மீதும், திமுக அரசு மீதும் வீணாக பழி சுமத்தினார். இதற்கு தற்போது இதற்கு திமுகவினர், அமைச்சர்கள் என பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திமுக மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அளித்த பேட்டியில், கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது, “ஒரு புதிய கட்சியை தொடங்குபவர்கள், மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த என்ன செய்யவேண்டுமோ அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, திமுகவை விமர்சிப்பதில் மட்டுமே ஒரு அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பேசுவார்களாயின், இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சினிமாவில் பெரிய ஹீரோவாக நடித்துவிட்டால், அனைத்தையும் செய்துவிட்டார்கள் என்று மக்கள் கருதிவிட மாட்டார்கள். மக்களுக்கான பிரச்னைக்கு யார் உடன் நிற்கிறார்கள்?, மக்களுக்காக யார் போராடுகிறார்கள்?, யார் நல்லதை செய்கிறார்கள்? என்பதைதான் மக்கள் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட மாநிலமாகத்தான் தமிழ்நாடு இருக்கிறது.

இப்படி பேசுகிறவர்களுக்கெல்லாம் மக்கள் எல்லாவற்றையும் வாரி கொடுத்துவிடுவார்கள் என்று கிடையாது. கூட்டணி நேர்த்தியாக, உறுதியாக, கொள்கையாக கூடிக்கொண்டுதான் இருக்கிறது. 2018-ல் உருவான கூட்டணி, தொடர்ந்து 6 ஆண்டுகளாக இருக்கிறது. 6 ஆண்டு காலத்திலும் சந்தித்த எல்லா தேர்தலிலும் இந்த கூட்டணியே வென்றிருக்கிறது. ஊடகவியலாளர்கள், அரசியல் நோக்கர்களுக்கு தெரியும்.

2019-ம் ஆண்டு கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளை கடந்து, கூடுதலாக 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தது. அதே போல 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூடுதல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இவை எல்லாம் இந்த ஆட்சி நல்லாட்சி என்பதைத்தான் காட்டுகிறது.

எனவே, இந்த கூட்டணி கூடுதலாக இன்னும் வலிமை பெற்றுக்கொண்டுதான் வருகிறது . இது வலிமைமிக்க கூட்டணி. இதை உடைக்கவேண்டும் என்று கருதக் கூடியவர்கள். பொறாமையில் வயித்தெரிச்சலில் பேசுவதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை. புதிய கட்சியை தொடங்குபவர்கள் முதலில் மக்களிடம் நம்பிக்கை ஊட்டும் வகையில் செயல்படவேண்டும். திமுக கூட்டணி உடையவில்லை என்ற பொறாமை, வயித்தெரிச்சலில் சிலர் பேசுவதை எல்லாம் பொருட்படுத்த முடியாது. முதலில் விஜய், மக்களின் வாக்கை பெற்று ஒரு கவுன்சிலர் ஆகட்டும்.

அரசியலே தெரியாத ஒருவராக இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். மக்களை சந்தித்து, மக்களிடம் வாக்கை பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஒருவர் ஆனபிறகுதான் இதை பேசவேண்டும். ஆகாதவர்கள் எல்லாம் இதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் பெரிய மழை வெள்ளம் வந்தது. நலத்திட்டத்தையே work from home-ல் கொடுத்திருக்கிறார். இது எந்த ஊரிலாவது நடக்குமா? வெள்ளம் வந்த களத்திற்கே போகாதவர்கள் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?” என்றார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!