கீழக்கரை இளைஞர்களுக்கும், வாலிபால் போட்டிக்கும் எப்பொழுதும் ஒரு ராசியான தொடர்புண்டு. எந்த போட்டிக்கு சென்றாலும் எந்த அளவிளாவது வெற்றி வாகை சூட்டுவார்கள்.
கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் இளைஞர்கள் சமீபத்தில் 24ம் தேதி முத்துப்பேட்டையில் நடந்த போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று ரூ.6000/-ம் பரிசாக வென்றார்கள், அதுபோல் 25ம் தேதி மக்கள்பாதை திடல் திட்டத்தின் வாலிபால் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று ரூ.7000/- பரிசை பெற்றுள்ளார்கள்.

கீழக்க்ரையில் உள்ள பல வாலிபால் சங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக பரிசுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையில் உள்ள சமூக அமைப்புகள் ஒன்றினைந்து இளைஞர்கள் வாலிபால் பயிற்சிக்கான நல்ல களத்தை உருவாக்கி கொடுக்கும் பட்சத்தில் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் ஜொலிப்பதற்கு வாய்ப்புண்டு.

இன்னும் கீழக்கரை இளைஞர்கள் பல வெற்றிகள் பெற கீழை நியூஸ் உலகம் நிர்வாகம் வாழத்துகிறது..


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









