
கீழக்கரையில் தொடரும் அவலம்..
சாக்கடை பெருகெடுத்து ஓடும் சி.எஸ..ஐ பள்ளி பின்புறம்..
பொதுமக்களின் ஏமாற்றமும், எதிர்பார்ப்புகளும்…
கீழக்கரையில் மிகவும் பழமை வாய்ந்த பள்ளிக்கூடங்களில் ஒன்று சி.எஸ்.ஐ பள்ளியாகும். இவ்வழிதான் கீழக்கரையின் முக்கியத் தெருக்களான வடக்குத் தெரு, புதுத் தெரு போன்ற இடங்களுக்கு செல்லும் நுழைவு வழியாகும். இப்பகுதியும் சாக்கடையும் பிரியாத அம்சம் போல் ஆகிவிட்டது. இங்கு வழிந்தோடும் சாக்கடையால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு சிறுவர்களும், பெரியவர்களும் பெரும் அவதிக்கு உட்பட்டு வருகிறார்கள். இங்கு வசித்து வரும் ஆசிரியை ஒருவர் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக சென்று அதிகாரிகளைப் பார்த்து மனு கொடுத்த பின்பும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். இங்கு தெருவில் விளையாடும் சிறுவர்கள் என்று தனக்கும் ஒரு தூய்மையான இடம் கிடைக்கும் என்ற ஏக்கத்திலேயே காணப்படுகிறார்கள். இப்பகுதியில் பல அரசியல்வாதிகளும், தொழில் செய்பவர்கள் வசித்து வந்தாலும் எந்த ஒரு முன்னேற்றமும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போல் தெரியவில்லை. கடந்த ஆட்சியில் இருந்த நகர் மன்ற உறுப்பினர்களாலும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை, வரப் போகும் நகர் மன்ற உறுப்பினர்களாவது செய்வார்களா? நம் தெரு சுத்தமடையுமா என்று எதிர்பார்ப்பு அத்தெரு மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. இந்நிலையில் மக்கள்நலப் பாதுகாப்பு கழகம் சார்பாகவும் மீண்டும் இப்பகுதி விசயமாக விரைவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்க இருக்கிறார்கள். இல்லையென்றால் இந்த தெருவுக்கும் சொந்த செலவில் சுத்தம் செய்யும் அரசியல்வாதி வந்தால்தான் விடிவு காலம் கிடைக்குமோ??உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
error: Content is protected !!
You must be logged in to post a comment.