இராமநாதபுரம், அக்.16- ராமேஸ்வரத்தில் CRZ (கடல் ஒழுங்குமுறை சீர்திருத்த மண்டலம்) வரைபட தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜெபமாலை பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட கடற்கரை மேலாண்குழு உறுப்பினர் சேனாதிபதி சின்னத்தம்பி பேசினார்.
கடல் ஒழுங்கு சீர்திருத்த 2019 ஆண்டு தயாரிப்பு வரைபடம் காணொலி மூலம் மீனவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. CRZ வரைபடத்தில் ராமேஸ்வரம் தீவில் உள்ள பல மீனவ கிராமங்கள் மாயமானதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். மீனவர்களின் ஆலோசனை படி புதிய வரைபடம் தயாரிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். மீனவர்களை கடல்சார் பழங்குடி மக்களாக அறிவிக்கவேண்டும். மண்டல் கமிஷன் பரிந்துரை படி மீனவர்களுக்கு தனி நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைக்கப்படவேண்டும் உள்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வரைபடம் மீண்டும் தயாரித்து அரசுக்கு பரிந்துரைக்கும் விதமாக, கிராமத்துக்கு இருவர் வீதம் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மீனவப்பிரதிநிதிகள் பிரின்சோ ரெய்மெண்ட், பிரபு உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். வேர்க்கோடு, ஓலைகுடா, சுடுகாட்டான்பட்டி, செங்கோல் நகர், அரியாங்குண்டு, தென்கூடா, நொச்சிகுடா, தண்ணீர்ஊற்று, புதூர், வேர்க்காடு அக்காள்மடம் வடக்கு, பிள்ளைகுளம் மீனவ கிராம தலைவர்கள் கலந்துகொண்டனர். கிழக்கு கடற்கரை மீனவ மக்கள் இயக்க அமைப்பாளர் ஆனந்த் ஏற்பாடு செய்தார்.


You must be logged in to post a comment.