புதிய சட்டத் திருத்ததை கண்டித்து 3 வது நாளாக உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்திலிருந்து கவணம்பட்டி ரோடு, தேவர் சிலை வழியாக பேரையூர் சாலையில் ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பியும், சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் வரும் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டமாக தொடர் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.,

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!