கீழக்கரையில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி..

இராமநாதபுரம், ஆக.14 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையே முதல்முறையாக கிரிக்கெட் போட்டி நடந்தது. 10 அணிகள் பங்கேற்ற போட்டியை கல்லூரி முதல்வர் ராஜசேகர் துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமார், பல்கலை உயிர் தகவலியல் பேராசிரியர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர். அரை இறுதி ஆட்டத்தில் திருவாடானை அரசு கலைக் கல்லூரி, தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி, அழகப்பா பல்கலை கல்லூரி, கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. இறுதி ஆட்டத்தில் அழகப்பா பல்கலை கல்லூரி அணி, கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லூரியை வென்றது. தொடர் நாயகனாக செய்யது ஹமிதா கலை கல்லூரி உடற் கல்வி இயக்குனர் தவசலிங்கம், ஆட்ட நாயகனாக  பேராசிரியர் முகேஷ் கண்ணன்,  சிறந்த பந்து வீச்சாளராக  பேராசிரியர் தயாநிதி, சிறந்த தடுப்பாளராக வசந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் சுரேஷ், கபிலன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். அழகப்பா அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார் வர்ணனையாளராக பணியாற்றினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!