திருச்சியில் தனியார் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன், கடுமையான பயிற்சியின் முயற்சியும் செய்தால்தான் இந்திய அணியில் இடம்பெற முடியும்”.
தமிழ்நாடு பிரிமியர் லீக் பல திறமையான வீரர்களை உருவாக்கி வருகிறது . தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடியதால் தான் நான் இந்திய அணிக்கு தேர்வானேன். கிராமத்தில் இருந்து வந்த நான் இந்திய அணியில் தேர்வானதே பெரிய சாதனைதான். இனி வரும் காலங்களில் கிராமத்து இளைஞர்கள் நான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது என்பதற்காக எனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து கொடுத்துள்ளேன். நிறைய மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை வருங்காலத்து இளைஞர்கள் கிரிக்கெட்டை நேசித்து விளையாடினால் கண்டிப்பாக இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றார்.
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.