கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணி நிரந்தர தூய்மை பணியாளர்களாக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பணி நிறைவு பெறும் பணியாளர்களுக்கு மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பாக பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
பணி நிறைவு ஓய்வு பெற்ற கமலா,செம்பா, ரங்கம்மாள், இந்திராணி, பல்லாக்காள்,
லோகிதாஸ், லிங்கம்மாள் ஆகியோரை
சிஐடியு தூய்மை பணியாளர்கள் சங்கம் இணைப்பு மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக சான்றிதழ் கொடுத்து சந்தனமாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் சிஐடியு மேட்டுப்பாளையம் தாலுக்கா பொதுச் செயலாளர் பாஷா மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.