மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு பொதுத்தொழியாளர் சங்கத்தின் சார்பாக 13-வதுமகாசபை மாநாடு கொடியேற்றத்துடன் நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 13 ஆவது மாநாடு ஈஸ்வரி அம்மாள் சேரன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த மாநாட்டை சங்கத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார் சானவாஸ் முகமது அலி ஜின்னா சாமுவேல் முன்னணி வகித்தனர் மூத்த தலைவர் பெருமாள் சங்க கொடியை ஏற்றி வைத்தார் மாநாட்டில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் மனோகரன் சங்க பொதுச் செயலாளர் பாஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் கனகாமணி சதாம் உசேன் சத்யா பஷீர் காளீஸ்வரன் பார்த்தசாரதி யாசர் மேலும் மாவட்ட நிர்வாகிகள் தாலுகா பொறுப்பாளர்கள், சி,ஐ,டி,யு பொதுத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நடைபெற்ற மகாசபை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது தலைவராக தோழர் சம்சுதீன் தாலுகா பொதுச் செயலாளராக தோழர் பாஷா துணை தலைவர் தோழர்கள், நாகராஜ்,காளீஸ்வரன் பொருளாளர்தோழர்,சத்தியா. செயலாளர் தோழர்கள் ஷானவாஸ். மனாசே சாமுவேல்,முகமது அலி ஜின்னா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்களுடன் கௌரவ ஆலோசகராக மூத்த தோழர் பெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிறப்பாக மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர் சங்க 13 வது மகாசபை மாநாட்டில் தாலுகா மற்றும் மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தீர்மானம் 1 மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் சுற்றுப்புறத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தி பொதுமக்களையும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் பாதுகாக்க வேண்டி தீர்மானம் 2 தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர் களை அமர்த்துக்கோரி குறிப்பாக இருதய சிகிச்சைக்கும்அறுவை சிகிச்சைக்கும், மகப்பேறு சிகிச்சைக்கும் மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தேவையான தூய்மை பணியாளர்களையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தவேண்டும் தீர்மானம் 3 மேட்டுப்பாளையம் ராமப்ப ரோட்டில் கட்டப்படும் காய்கறி மார்க்கெட் பணியை விரைவு படுத்தவும் சந்தை கடையில் உள்ள காய்கறி சந்தையை சாலையோர சிறு வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவும் மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோரசிறு வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே கடைகள் அமைத்து தரவும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பகுதியில் அமைக்கும் கடைகளில் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கிடவும்

தீர்மானம் 4 மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தண்ணீர் தடை இல்லாமல் குடிநீர் வழங்கிடவும் மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் தொகைகு ஏற்ப தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்திடவும் விளாமரத்தூர் குடிநீர் திட்ட பணிகளை துரிதப்படுத்திடவும் ,தெருக்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்கள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டியும் நகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்திடவும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துரிதமாக செயல்படுத்தி பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டியும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மேட்டுப்பாளையம் நகர் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம் நெல்லித்துறை சாலை பாரதியார் நூற்றாண்டு கட்டிடம் உள்ளிட்ட நகராட்சி கட்டிடங்களில் தங்கும் விடுதிகள் அமைத்திடவும் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயனடையும் வகையில் காலியாக உள்ள நகராட்சி இடங்களில் சமூக நலக்கூடங்கள் அமைக்கவும் வேண்டும் தீர்மானம் 5 மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளுக்கு காலை மாலை கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் கல்லூரிக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் போதிய தூய்மை பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் இரவு நேர காவலர்களை பணியமர்த்த வேண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் இந்த வேடும் தீர்மானம் 6 மேட்டுப்பாளையம் பகுதியில் ஊட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக வனவிலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தவும் இதனை கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வனம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை முறையாக பாதுகாக்க வேண்டும் 7 தீர்மானம் மேட்டுப்பாளையம் சுற்றுப்புறப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது ஆகவே மேற்படி சாலைகளை பராமரித்து சீரமைக்க வேண்டும் தீர்மானம் 8 மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் தொகை கேட்ப கூடுதல் காவல் துறையினரை பணியமர்த்திடவும் மகளிர் மற்றும் பெண் சிறார்கள் குற்ற செயல்கள் சமீபமாக அதிகரித்து இருப்பதால் மகளிர் காவல் நிலையத்தை மேட்டுப்பாளையம் மையப் பகுதியில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படுத்திடவும் மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கட்டிடம் மற்றும் மகளிர் காவல் நிலைய கட்டிடத்தை சொந்த கட்டிடத்தில் செயல்படுத்திடவும் வேண்டும் தீர்மானம் 9 மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை அதிகப்படுத்திடவும், மேட்டுப்பாளையம் கோவை ரயில் பாதையை இருவழிப்பாதையாக அமைத்திடவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்களை இயக்கிடவும் குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து பெங்களூர் கேரளா போன்ற பகுதிகளுக்கு ரயில்களை இயக்கிடவும் மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்திட வேண்டும் தீர்மானம் 10 மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக குடிமனைக்காக விண்ணப்பித்து உள்ள தகுதியான ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கிடவும் ஏற்கனவே வீட்டுமனை வழங்கிய இடங்களில் இலவச வீட்டு மனை கட்டி தந்திடவும் பொதுமக்களின் வருமானச் சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு செல்லும்பொழுது போதிய அதிகாரிகள் இல்லாததால் மிகவும் அழகளிக்கப்படுகிறார்கள் ஆகவே சம்பந்தப்பட்ட துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிடவும் வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களைபூர்த்தி செய்ய வேண்டும் தீர்மானம் 11 மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்கு சுணக்கம் ஏற்படுகிறது ஆகவே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நீரப்பிட வேண்டும் தீர்மானம் 12 மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் விலைநிலங்களில் அடிக்கடி வனவிலங்குகளால்விவசாயிகள் நிலங்களில்பயிரிடப்பட்டுள்ள பொருட்கள் சேதாரம் ஆகி விடுகிறது மேலும் இயற்கை சீற்றத்தினாலும் பயிர்கள் சேதாரம் ஆகிவிடுகிறது இது போன்ற நிலைகளில் விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் போதிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை ஆகவே விவசாயிகள் பாதிக்காத வகையில் தகுதியான அதிகாரிகளை அனுப்பிவைத்து விவசாயிகளில் பயிர் சேதங்களை முறையாக கண்காணித்து அவர்கள் நஷ்டம் அடையாத வகையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும் வனப்பகுதிக்கு அருகில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இலவசமாக மின்வெளி அரசாங்கமே அமைத்து தந்திடவேண்டும் 13 தீர்மானம் மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வீட்டு வசதி சாலை கழிவறை உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் மேற்படி மக்களுக்கு தேவையான ரேசன் கடை பள்ளிக்கூடம் போன்றவைகளை அமைத்து தந்திடவும் அப்பகுதி மக்கள் சென்று வர போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரவும் வேண்டும் தீர்மானம் 14 மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள கல்லார் பல பண்ணையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடக் கோரியும் கல்லார் பலப்பண்ணையை மாற்றி வேறு இடத்தில் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் தீர்மானம் 15 பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைகளையும் பல லட்சக்கணக்கான விவசாய விலை நிலங்கள் பயனடைந்து வரும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலக்கப்படும் ஆளை கழிவுகளை தடுத்து நிறுத்தவும், சாக்கடை கழிவுகளை கலப்பதை தடுத்து நிறுத்தவும் இதுபோன்று கழிவுகளை பவானி ஆற்றில் கலந்து விடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திடவும் சிதிலமடைந்து கிடக்கும் பவானி ஆற்றுப்பாலத்தை சீரமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் துரிதப்படுத்தி உடனடியாக சீரமைக்க வேண்டும் தீர்மானம் 16 மேட்டுப்பாளையம் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்ததுடன் குடியிருப்புகள் அதிகரித்திருப்பதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது குறிப்பாக காலை மாலை வேலைகளில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கோவை சாலைகளில் பொதுமக்கள் செல்வதற்கே மிகவும் அச்சப்படுகிறார்கள் இதிலும் சுற்றுலா காலகட்டங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் செல்வதால் மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் சொல்ல இயலா துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள் ஆகவே மேட்டுப்பாளையம் பகுதி மக்களை பாதுகாக்கும் வகையில் புறவழிச் சாலை திட்டத்தை துரிதப்படுத்தி பொதுமக்களை பாதுகாத்திட இந்த அரசை மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக நடைபெற்ற 13ஆவது மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றி முடித்தனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!