தனியார் தொழிற்சாலை நச்சு புகையால் பொதுமக்கள் திடீர் போராட்டம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை வெளியேற்றும் நச்சுப் புகையால் சுவாசக் கோளாறு பொதுமக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளி கோயில் செல்லும் சாலையில் சத்தியமூர்த்தி நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலையில் சாயப் பணிக்காக பயன்படுத்தப்படும் கழிவுகள் மற்றும் நச்சுப் புகையால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் இந்த தனியார் தொழிற்சாலையை சுற்றி பூங்கா, வழிபாட்டுத் தலங்கள், வியாபாரக் கடைகள், இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நந்தவனம் போன்ற பொது இடங்கள் உள்ளது மேலும் இரவு நேரத்திலும் தனியார் தொழிற்சாலை வெளியேற்றும் நச்சுப் புகையால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது சுவாசக் கோளாறால் பலர் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர் துர்நாற்றத்தால் மூக்கு எரிச்சல் உண்டாகிறது நீண்ட நாட்களுக்கு தனியார் தொழிற்சாலைக்கு மக்கள் சொல்லியும் எந்த பயனும் இல்லாததால் திடீரென்று இரவு நேரத்தில் மக்கள் ஒன்று கூடி தனியார் சாய தொழிற்சாலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இரவு நேரம் என்பதால் பொதுமக்களை சமரசம் பேசிய காவல்துறையினர் மறுநாள் பகல் வேளையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் கூட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் , பொதுமக்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வடக்கு திரு.கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்துடன் கூடிய நச்சுப்புகை முழுமையாக ஏழு நாட்களுக்குள் கட்டுப்படுத்துவோம் என்று தனியாக தொழிற்சாலை நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர் இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர் கூட்டத்திற்கு மேட்டுப்பாளையம் தாலுக்கா வட்டாட்சியர், மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்றனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!