கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அமமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கூட்டம் சார்பில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் P. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் JH. ஹக்கீம், நகரச் செயலாளர் PS. கார்த்திகேயன், அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சுலைமான், நகர பொருளாளர் சதீஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் சீனா அமீனுதீன், தகவல் தொழில்நுட்ப பிரிவு உச்சி மாகாளி பாண்டியன், ஊட்டி குமார், நமது எம்ஜிஆர் கிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சௌந்தர்ராஜன், செல்வம், மகளிர் அணி மல்லிகா, ஜீவரத்தினம், புஷ்பலதா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்


You must be logged in to post a comment.