முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் சிறுமுகை புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறகுகள் சங்கமம் 2025 நிகழ்ச்சியின் மூலம் 2001 முதல் 2008 வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிறகுகள் சங்கமம் 2025 நிகழ்ச்சியின் மூலம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு மற்றும் தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.இந்நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் செல்வ பாரத் தலைமையேற்று நடத்தினார் நிகழ்ச்சியில் சுகன்யா வரவேற்புரை வழங்கினார் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் 17 பேர் பங்கேற்று சிறகுகள் சங்கமம் 2008 கல்வி ஆண்டு மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தனர்.சிறகுகள் சங்கமம் 2025 நிகழ்ச்சி நிகழ்ச்சிக் துவங்குவதற்கு முன்பு
மேளதாளங்கள் முழங்க ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து வந்தனர் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வண்ணமாக நினைவு பரிசு வழங்கினர்.பள்ளியில் தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.சிறகுகள் சங்கமம் முன்னாள் மாணவர்கள் தங்கள் சார்பில் பள்ளிக்க கணினி வகுப்பறைகளுக்கு கிரீன் போர்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர் மேலும் பள்ளி கட்டிடம் பராமத்து பணிகள் மேற்கொள்ள நிதி உதவி மற்றும் மாணவிகள் கழிப்பறைக்கு குப்பைகளை எரிக்கும் கொள்கலன் வழங்குதல் வழங்கினர், பள்ளி வளாகத்தை இயற்கை சூழலில் அமைக்கும் வண்ணமாக மரக்கன்றுகள் வழங்கினர்.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளைசெளமியா,மோதிலால், ராஜ்குமார், சௌந்தர்யா, அசோக், சத்தியமூர்த்தி, கோகிலவாணி, சுபாஷ், அருண்குமார், பிரகாஷ் ஆகியோர் முன்னின்று மதிய விருந்துடன் விழா ஆயத்தம் செய்தனர்.விழாவில் முன்னாள் மாணவ-மாணவிகள் பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தாங்கள் கல்வி பயின்ற நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளை பேசி மகிழ்ந்திருந்தனர் அனைவரும் சிறகுகள் சங்கமம் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.பள்ளி உயர்கல்வி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் பழனி நன்றியுரை வழங்கினார்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!