பணி ஓய்வு பெற்றவர்களுக்கு தாமதமாக பணப்லன்கள் வழங்கினால் வட்டியுடன் அளிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு.. நகல் இணைப்பு..

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு காலம்தாழ்த்தி பணப்பலன்களை அளித்துவிட்டு, காலதாமதத்திற்கு வட்டி வழங்காமல்  இருப்பதற்கான சேலம் கழக அப்பீல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 09.07.2018 அன்று விசாரணைக்கு வந்தது.

 1) பணிஓய்வின் பொழுது இருப்பில் உள்ள விடுப்பிற்கான தொகையினை காலதாமதமாக பட்டுவாடா செய்ததற்காக வட்டி கோர/வழங்க இயலாது என்ற கழக வழக்கறிஞரின் வாதத்தினை நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்தது.

 2) ஓய்வுகால பலன்களை காலதாமதமாக பெற்று, காலதாமதத்திற்கான வட்டியினை வழங்க  நீதிமன்றத்தினை நாடாதவர்களுக்கும் (வழக்கு தொடுக்காதவர்கள்) வட்டி வழங்கவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது.

அதனை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் வட்டி வழங்குவதற்கான விபரத்தை அரசிடம் கலந்து தெரிவிக்குமாறு ஆணையிட்டு வழக்கினை 13.07.18க்கு ஒத்தி வைத்துள்ளது.

அரசாணை நகலை காண கீழே க்ளிக் செய்யவும்..

Do_Display (11)

தொகுப்பு

அ.சா.அலாவுதீன்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!