பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அருவியில் குளிக்க செய்து மகிழ்வித்த தென்காசி மாவட்ட வனத்துறையை பொது மக்கள் பாராட்டினர். தென்காசி மாவட்டம் பொதிகை மலையின் வனப் பகுதிகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சுற்றுலா பகுதியாக விளங்கும் குற்றால அருவிகளையும் உள்ளடக்கியது ஆகும். இந்த அருவிகளில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குளிப்பதற்கு வந்திருந்தனர்.
இதனை அறிந்த மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் உதவி வன பாதுகாவலர் நெல்லை நாயகம் மற்றும் தென்காசி வனச்சரகர் செல்லத் துரை ஆகியோர் ஆலோசனையின் பேரில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை மகிழ்விக்கும் விதமாக பாதுகாப்புடன் அருவியில் நன்றாக குளிக்க செய்து அனுப்பி வைத்தனர். வனத் துறையின் இச்செயலை நெகிழ்ச்சியோடு பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.