தென்காசியில் நடந்த மக்கள் நீதி மன்றம்; ஐந்து கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு..

தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாய் சரவணன் வழிகாட்டுதலின் பேரில், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான ஏ. பிஸ்மிதா முன்னிலையில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

 

இதில் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.முருகவேல், தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நிதிபதி ஜெ. ராஜேஷ்குமார், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எஸ் முத்துலெட்சுமி குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ் முத்துலட்சுமி, தென்காசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே என். குரு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ் தங்கக்கனி, பி. முருகையா மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 4 கோடி 45 லட்சத்து 25 ஆயிரத்து 681 ரூபாய் மதிப்புள்ள 241 வழக்குகளும், நீதி மன்றத்திற்கு முன் வரும் வங்கி வழக்கு 53,70,816 ரூபாய் மதிப்புள்ள 114 வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது.

 

இதில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 37,11 ,100 ரூபாய் மதிப்புள்ள 681 வழக்குகளும், நீதிமன்றத்திற்கு முன் வரும் வங்கி வழக்கு 24,80,741 மதிப்புள்ள 46 வழக்குகளும் சமரசமாக முடிக்கப் பெற்றது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 48,58,150 ரூபாய் மதிப்புள்ள 27 வழக்குகள் சமரசமாக முடிக்கப் பெற்றது. தென்காசி மாவட்டம் சிவகிரி மக்கள் நீதிமன்றத்தில் 5,42,700 ரூபாய் மதிப்புள்ள 126 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 6,09,700 ரூபாய் மதிப்புள்ள 152 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!