இன்றைய சமுதாயத்திற்கு தேவை வளமான கல்விச் செல்வம் அதை சரியாக வழிகாட்டும் கடமை பெற்றோர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் உண்டு. ஒவ்வொரு மாணவச் செல்வங்களின் தனித் தன்மையை அறிந்து, அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப சரியான உலகக் கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வில் நல்ல இடத்தை அடைய முடியும். அதன் தொடக்கமாக தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய கல்வி நிலையங்களுடன் சேர்ந்து உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தொடர்வாக நடத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் வரும் 05-05-2017 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எது கல்வி மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பைசல் அஹமது சிறப்புரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் எம்.முஹம்மது இஸ்மாயில் என்ன படிக்கலாம் மற்றும் எது நம் இலக்கு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியை கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) முகைதீனியா பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து நடத்துகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்து 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளை பெற்றோர்களுடன் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









