கொரோனா..ஊரடங்கினாலும்… பசி அடங்காது… குழந்தைகள் பசி தீர்க்க தேனீர் விற்கும் பெண்…

கொரோனா ஊரடங்கால் தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் வாழ்வாதரத்திற்காக பல்வேறு மாற்று தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்  ஒரு பகுதியாக மதுரை கரும்பாலை அருகேயுள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்த 26வயதுடைய உம்மசல்மா என்ற பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக வசித்துவரும் நிலையில் கொரோனாவிற்கு முன்பாக வீட்டுவேலைக்கு சென்று மாதந்தோறும் 4ஆயிரம் ஊதியம் பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் 3மாதமாக எந்தவித வருமானமின்றி தவித்துவந்துள்ளார். இதன்காரணமாக வீட்டிற்குள் முடங்கி கிடந்தால் வறுமையும், பசியும் தன்னையும் தன் குழந்தையையும் பாடாய் படுத்திவிடும் என்று எண்ணி தனது தந்தை செய்த தொழிலான தேநீர் விற்கும் தொழிலை செய்ய துணிச்சலோடு வெளியில் வந்து தனது தந்தை பைக்கை பயன்படுத்தி மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேநீர் விற்பனையில் ஈடுபட்டுவருகிறார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறகூடிய பகுதிகளுக்கு சென்று தேநீர் விற்பனை செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக காலை மாலை வேளைகளில் சுமார் 100தேநீர் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் தனது குழந்தையின் பசியை போக்குவதோடு தாய் தந்தை தங்கைக்கு உணவுக்கு பணம் வழங்கிவருகிறார். வீட்டு வாடகை 2ஆயிரம் வழங்க வேண்டிய நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்கிவருகிறார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட குடும்பசூழலை கருத்தில்கொண்டு துணிச்சலோடு கொரோனா அச்சத்தையும் கடந்து வீதி வீதியாக சென்று தன் குழந்தை மற்றும் தனது குடும்பத்தின் பசிபோக்கும் இந்த இளம்பெண்ணின் புதிய முடிவை அனைத்து தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.

தன்னை போன்று ஏராளமான பெண்கள் கொரோனா ஊரடங்கால் உணவின்றிஇழ வாடுவதாகவும், கடன் வாங்கி சொல்லொனா துயருக்கு ஆளாக கூடிய நிலை உள்ளதால் அரசு தன்னை போன்ற ஆதரவற்ற பெண்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!