ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது .
கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் குழாய் பதித்தல் பேவர் பிளாக் அமைத்தல் வார்க்கால் அமைத்தல் கழிவு நீர் குழாய் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர் . அதன் அடிப்படையில்
ஒன்னாவது வார்டில் அமைந்திருக்கும் ஜாமியா நகரில் கழிவு நீர் குழாய் அமைத்து மோட்டார அமைப்பதற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் இரண்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அருகில் மற்றும் வள்ளல் சீதக்காதி சாலை பகுதிகளில் கழிவு நீர் குழாய் அமைப்பதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் மூன்றில் அமைந்துள்ள பருத்தி கார தெருவில் கழிவு நீர் குழாய் மற்றும் கட்சுமரைக்காயர் தெரு முதல் பணியக்காரத் தெரு வரை ஃபேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் நான்கில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மற்றும் தச்சர் தெரு வரை வாறுகால் உயர்த்தி 50 எண்ணம் மூடி அமைப்பதற்கு நான்கு லட்ச ரூபாயும் ,
வார்டு எண் 5 அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வாறுகால் அகற்றி புதிதாக அமைத்தல் மற்றும் அண்ணாநகர் பகுதியில் உள்ள நகராட்சி பொது கிணற்றுக்கு மின் மோட்டார் மற்றும் முத்துச்சாமிபுரத்தில் கலைஞர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் ஆறில் அமைந்துள்ள அன்னாப்பா கடை பின்புறம் மற்றும் P.S. வீடு முதல் பட்டானியப்பா ஆர்ச் பக்கம் வரை பைப்பலைன் மற்றும் மூடிகள் அமைப்பதற்கு மூன்று லட்ச ரூபாயும் ,
வார்டு எண் 7 ல் அமைந்துள்ள முகைதீனியா பள்ளி எதிரில் உள்ள சந்தில் பைப்லைன் அமைப்பதற்கு நான்கு லட்ச ரூபாயும் ,
வார்டு எண் எட்டில் அமைந்துள்ள இஸ்லாமியா பள்ளி எதிரில் உள்ள சந்தில் பைப்லைன் அமைப்பதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் ஒன்பதில் அமைந்துள்ள அம்பலார் கிட்டங்கி எதிர்புறம் கழிவு நீர் பைப்பலைன் அமைப்பதற்கு 5 லட்சம் ரூபாயும் ,
வார்டு எண் பத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கு சிங்கிள் போர்டு அமைப்பதற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் ,
வார்டு எண் 11-ல் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய்க்கு மூடிகளும் மாறுகால் உயர்த்துவதற்கு சிறு வேலைகள் மற்றும் ஒட்டு வேலைக்கும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் 12ல் அமைந்துள்ள தெற்குத் தெரு களஞ்சியம் வீட்டிலிருந்து ஏ.கே.எஸ். வீடு வரை பைப்லைன் அமைப்பதற்கு கட்டாலிம்சா பங்களா எதிரில் மற்றும் PH பஜார் எதிரில் உள்ள வாறுகால் அகற்றி புதிதாக அமைப்பதற்கும் மற்றும் இதர வேலைகளுக்கும் நான்கு லட்ச ரூபாயும் ,
வார்டு எண் 13 ல் அமைந்துள்ள சம்மாட்டி தெருவில் கழிவு நீர் பைப்லைன் அமைப்பதற்கு மூன்று லட்ச ரூபாயும் ,
வார்டு எண் 14 ல் அமைந்துள்ள அபுசாலிஹ் பள்ளியில் இருந்து ஹமீதியா பள்ளி வரை கழிவு நீர் பைப்லைன் அமைப்பதற்கு ஐந்து லட்ச ரூபாயும் ,
வார்டு எண் 15 இல் அமைந்துள்ள கருத்தம்மா பள்ளி அருகில் கழிவு நீர் பைப்லைன் அமைப்பதற்கு மூன்று லட்ச ரூபாயும் ,
வார்டு எண் 16 இல் அமைந்துள்ள நடுத்தெரு பகுதியில் கழிவு நீர் பைப்லைன் அமைப்பதற்கு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் ,
வார்டு எண் 17 இல் அமைந்துள்ள பச்சிலைத் திரு எம் எம் டி தெரு அத்திளை தெரு போன்ற பகுதிகளுக்கு கழிவுநீர் பைப் லைன் அமைப்பதற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் பதினெட்டில் அமைந்துள்ள சேராதெரு லெப்பை தெரு பகுதியில் கழிவு நீர் பைப்லைன் அமைப்பதற்கும் மூடிகள் மற்றும் இதர வேலைபாடுகளுக்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் 19 இல் அமைந்துள்ள பெத்தரை தெரு மையவாடி அருகில் கழிவுநீர் பைப்லைன் மற்றும் வாருகால் உயர்த்துதல் போன்ற பணிகளுக்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் 20 ல் அமைந்துள்ள பகுதிகளுக்கு மையவாடி கூடம் அமைத்தல் சேம்பர் மூடி அமைத்தல் மற்றும் இதர வேலைகளுக்கு மூன்று லட்சத்தை 50 ஆயிரம் ரூபாயும் ,
வார்டு எண் 21 இல் அமைந்துள்ள பகுதிகளுக்கு மூடி அமைத்தல் மற்றும் இதர வேலைகளுக்கு 3 லட்சம் ரூபாயும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 நிதியிலிருந்து இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழங்கியுள்ளார்.
இதற்கு அனைத்து உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கீழக்கரை நகர் முழுவதும் தெருநாய்கள் சுற்றித் திரிகிறது இதனை முழுமையாக நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா நகராட்சி சார்பாக நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை மையம் அமைக்கப்பட்டுள்ளது வருகின்ற டிசம்பர் மாதத்தில் இருந்து நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவ்வப்போது மின் விளக்குகள் மற்றும் கழிவுநீர் மூடிகள் உடைபட்டு ஆங்காங்கே கிடைக்கின்றது ஒரு சில வேலைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்பை நகர் முழுவதும் அகற்றுவதற்கு முன்னறிவிப்பு செய்து செயல்படுகின்றீர்கள் அதனை வரவேற்கிறோம் ஆனால் ஆக்கிரமிப்பு நடந்த பின்பும் மறுநாள் திரும்பவும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது இதற்கு நகராட்சி நிர்வாகம் ஏன் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை அதனை கண்காணிப்பது இல்லை என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் ஊருக்குள் வரக்கூடிய குடி தண்ணீர் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது .
அதனை தொடர்ந்து இருபதாவது வார்டு உறுப்பினர் பலமுறை அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டும் நகராட்சி நிர்வாகம் ‘செவிடன் காதில் சங்கு ஊதியது போல’ அலட்சியமாகச் செயல்படுகிறது,” என்று குற்றம் சாட்டிய
நகர்மன்றத் தலைவர் நேரடியாகப் பதிலளிக்காததால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இவரது இந்த வெளிநடப்பால் நகர்மன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.








You must be logged in to post a comment.