மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் பொறுப்பு அசோக்குமார் தலைமையில் நகராட்சி தலைவி சகுந்தலா துணைத்தலைவி தேன்மொழி பொதுப்பணி மேற்பார்வையாளர் பாலமுருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர். நகராட்சி அண்ணா திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தினர். அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சிக்கு தமிழக அரசு போதிய நிதி வழங்க வேண்டும் எனவும் நகராட்சி நிரந்தர ஆணையாளர் மற்றும் பொறியாளர் மற்றும் நகராட்சி மேற்பார்வையாளர் நியமனம் செய்யக் கோரியும் கூட்ட அரங்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக கவுன்சிலர்கள் 9 பேர்கள் நகராட்சி தலைவியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தை வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் அதிமுகவினர் 10 பேர் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்து இட்டதால் 18 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறியது. திமுக அதிமுக மாறி மாறி கூட்ட அரங்கில் ஆர்ப்பாட்டம் செய்ததால் கவுன்சிலர் கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது
உசிலை மோகன்
You must be logged in to post a comment.