பூலாங்குளம் அரசு பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்..

பூலாங்குளம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி குணரத்தினம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜூலியா டெய்சி மேரி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, பூலாங்குளம் அரசு பள்ளியில் ஆகியோர் பங்கேற்று 138 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர்.

இவ்விழாவில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவன் பாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர், ஜெ.கே. ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சீ. பொன்செல்வன், முத்துராஜ், பொறியாளர் அணி துணை அமைச்சர் தளபதி சிவராஜன், பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், சாம்பவர் வடகரை கோ.மாறன், இளைஞரணி கோமு, நிர்வாகிகள் தளபதி முருகேசன், தங்கச்சாமி, முயல், சீதாராமன், செந்தில், காளிமுத்து, மாரிமுத்து, மோகன், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார், சச்சின், ஜெயக்குமார், ஓவிய ஆசிரியர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!