தமிழகம் முழுவதும் சுகாதார துறை சார்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து பஞ்சாயத்திற்குட்பட்ட அன்னமார்பட்டி ரயில்வே பீடர் ரோடு, கொக்குடையான்பட்டி, மெய்யணம்பட்டி, நல்லிவீரன்பட்டி போன்ற பகுதிகளில் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி வீதி வீதியாக சென்று கொரோனா வைரஸ் குறித்து ஆட்டோ மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சுகாதாதுறை வெளியிட்டுள்ளதை போல் கைகளை சுத்தமாக கழுவுதல், வெளியூர் பயனங்களை தவிர்த்தல், இருமல், சளி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டு கொண்டார். இதில் சுகாதார துறை பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து கிராம மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வரும் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.
உசிலை சிந்தனியா





You must be logged in to post a comment.