காற்றில் பறக்கும் அரசாங்க வழிமுறைகள்… மருத்துவமனையா??.. டீ கடையா??.. சந்தேகத்தை கிளப்பும் மருத்துவமனையில் டீ அருந்துபவர்களின் கூட்டம்…நடவடிக்கை எடுக்க முயன்ற சுகாதார ஆய்வாளருக்கு மிரட்டல்..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வது வார்டு திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் 24 மணி நேரமும் டீ கடையை திறந்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் வந்ததை அடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் சம்பவ இடத்திற்கு சென்றபொழுது அங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட நபர்கள் குழுமியிருந்துள்ளனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் கடையை அடைக்க வலியுறுத்திய பொழது, அங்கிருந்த ஒருவர் தான் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி “உன்னால் முடிந்ததை பார்” என ஒருமையில் பேசி  கடமையை செய்ய வந்த அதிகாரியை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை காவல்துறையினர் தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!