தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்னை கோட்டையில் நிவாரண தொகை 2000 மற்றும் உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (15/06/2021) ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தட்டான் தோப்பு தெருவில் உள்ள நியாய விலைக் கடை என் 1ன்னில் நிவாரண தொகை 2000 மற்றும் உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தொடங்கி வைத்தார். உடன் நகராட்சி ஆணையாளர் பொறுப்புக்கு பூபதி உடன் இருந்தார் கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்வின் போது கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் நகர் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













You must be logged in to post a comment.