எங்கே சமூக இடைவெளி??.. நிவாரணம் கட்டுபடுத்தவா??.. பரப்பவா..??..

ரேசன் கடையில் ரூ 1000 பணம் பெறுவதற்காக முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக வந்து வாங்கி சென்ற மக்கள், விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட ரேசன் கடை ஊழியர்கள்.

கொரானா வைரஸ் காரணமாக மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம், பரவை, மதுரை கிழக்கு மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ 1000 வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் 1000 ரூ நிவாரண தொகை பெறுவதற்காக கிராம மக்கள் முகக் கவசம் கூட அணியாமல் சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கி சென்றனர்.

ரேசன் கடை பணியாளர்களும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் கட்டுபாட்டு விதிமுறைகள் காற்றில் பறந்து போனது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!