விருதுநகரில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா.. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது…

விருதுநகரில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பணிபுரிந்த போக்குவரத்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

விருதுநகர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் கணேசன்இவர் ஊரடங்கு அமலில் இருந்த காலம் முதல் தற்போது வரை விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் முழு உடல் பரிசோதனைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் இவருக்கு கோரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது இதை அடுத்து இவருக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இவர் வசித்த பாண்டியன் நகர் பகுதி மற்றும் பணிபுரிந்த விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையம் முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர் அதன் பின்பு போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

இதனால் காவலருக்கு கோரோனோ தொற்று உறுதி ஏற்பட்டு உள்ள சம்பவம். சக காவலர்கள் இடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதையடுத்து விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் 21 காவலர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களுக்கு கோரோனோ பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!