இராமநாதபுரம், செப்.21-
ராமநாதபுரத்தில் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன், குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார. கலெக்டர் கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ், என அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935 ல் துவங்கி 88 ஆண்டுகளாக தமிழக ள்ள கைத்தறி தெசவாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திழ நெசவாளர்களின் ஒத்துழைப்பு, வாடிக்கையாளர்களின் பேராதரவுமே முக்கிய காரணம் ஆகும்.
கைத்தறி ரகங்களின் விற்பனைவை அதிகரிக்க தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல வண்ணங்களில் பல்வேறு வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளது. உடல் நலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ரசாயன உரங்கள் இன்றி, இயற்கையில் விளைந்த பருத்தியால் தயாரான ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம் , சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், காஞ்சி, சேலம், பரமக்குடி, திண்டுக்கல், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. ஆடவனா கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள் லுங்கிகள், வேட்டிகள், மகளிருக்கான சுடிதார் ரகங்கள், நைட்டிகள், குர்தீஸ்கள் கண் கவர் வண்ணங்களில் தருவிக்கப்பட்டுள்ளது.கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமாக www.cooptex.com என்ற மின் வணிக வலைதளமாக www.cooptex.com என்ற இணையதன தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவன வர்த்தக மேலாளர் சங்கர், வடிவமைப்பு, பகிர்மான மேலாளர் மோகன்குமார், உதவி மேலாளர் மணிவண்ணன், கிளை மேலாளர் யாண்டியம்மாள்: ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கம், நகர்மன்ற உறுப்பினர் இந்திரா மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.