கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்: பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சங்கத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024–2025 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் மாநில முகவரிப் பட்டியலில் இடம் பெற்றதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
முக்கிய தீர்மானங்கள்:
1. நீதிமன்றம்: கீழக்கரை தாலுகாவில் நீதிமன்றம் செயல்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
2. நூலகம்: கீழக்கரை அரசு கட்டிடத்தில் நவீன முறையில் நூலகம் அமைக்க, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்பெறச் செய்யும் திட்டம் உறுதி செய்யப்பட்டது.
3. போக்குவரத்து காவல் நிலையம்: கீழக்கரை பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது.
4. நஞ்சு இல்லா உணவு: பொதுமக்களுக்கு நஞ்சு இல்லா உணவு வழங்க, அரசு முழுமையாக செயல்பட வேண்டுமெனக் கோரிக்கை தீர்மானமாகக் கொண்டது.
இந்த பொதுக்குழுவில், செயலாளர் S. பாக்கர் அலி ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்க, பொருளாளர் U. விஜயராமு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். உறுப்பினர்களான ஜாகிர் உசேன், சீனி இப்ராஹிம், முகமது யூசுப், முத்துசாமி, மலராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.