கீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி …

இன்று (10/12/2018) கீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு வரவேற்புரையை கீழக்கரை நுகர்வோர் பாதுகாப்பு கழகம் செயலாளர் செய்யது இபுராஹிம் வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து தலைமையுரையை டாக்டர் துரைஸ்லிங்கம் வழங்கினார். பின்னர் கீழக்கரை BSNL அதிகாரி காளிமுத்து நுகர்வோர் சம்பந்தமான சிறப்புரையாற்றினார். பின்னர் கீழக்கரை மக்கள் டீம் காதர் மற்றும் புதுவை நுகர்வோர் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு செயலாளர் ஹலீல் பெய்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வான TRAI அமைப்புக்கான கருத்து கேட்கும் நிகழ்வு அவ்வமைப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியாக இராமநாதபுரம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் லதா நன்றியுரை வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!