ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா முத்தரையர் நகரில் கட்டிட தொழிலாளியான செல்வராஜ் (விழுப்புரத்தைச் சேர்ந்தவர்) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது முதல் மனைவியின் மகன் மணிகண்டன் (வயது 22) மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வராஜுக்கு முதல் மனைவி முனியம்மாள், மகன் மணிகண்டன் மற்றும் மகள் கோமதியும், இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் மகன் சுரேஷ், மகள் தேவி ஆகியோர் உள்ளனர்.
முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.இதனிடையே விழுப்புரத்தில் சொத்து தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படும் மூத்த மனைவியின் மணிகண்டன் மீது ஏர்வாடியில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், செல்வராஜ் நேற்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி வீடு திரும்பியபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்கு சொத்து தகராறு அல்லது முன்பகை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இதனால, போலீசார் மணிகண்டனை விழுப்புரத்தில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலையின் பின்னணி மற்றும் முன்பகை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment.