1823 கோடி ரூபாய் வரி! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி! நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு..

வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வருமான வரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!