பாசிச பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு நாம் இயங்க வேண்டும்!- காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகை பேச்சு..

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில்  பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தேசிய செயலாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் பொறுப்பாளர் சசிகாந்த் செந்தில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் தனுஷ்கோடி ஆதித்தன், மணிசங்கர் ஐயர், சுதர்சன நாச்சியப்பன், மாநில சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: பாசிச பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு நாம் இயங்க வேண்டும். காமராஜரின் ஆட்சி எப்போது வரும் என்று நமது தொண்டர்கள் கனவு கண்டு இருக்கிறார்கள். எங்களுக்கும் கனவு உண்டு ஒரு நாளைக்கு காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்று அதற்கு எல்லோரும் சேர்ந்து அஸ்திவாரம் போடுவோம். எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அது நடந்தே தீரும், என்று கூறினார்.

கூட்டத்தில் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொருளாளர் ரூபி மனோகரன், மகளிர் அணி தலைவி வக்கீல் சுதா ராமகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி எஸ்.பாஸ்கர், ரங்கபாஷியம், பி.வி.தமிழ்செல்வன், எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், இலக்கிய அணித் தலைவர் பி.எஸ்.புத்தன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் சென்னை ரவிராஜ், கலை பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் எஸ்.டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத், முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன், முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் வீரபாண்டியன், எஸ்.தீனா, நிர்வாகிகள் சுமதி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!