நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..

நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி பந்தலூர் அருகே தரையிறங்கினார். அப்போது ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து நீலகிரி தொகுதிக்குட்பட்ட கூடலூரில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை.

ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரே நாடு, ஒரே தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன; இந்தியாவின் இயல்பை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. பன்முகத்தன்மை மற்றும் சமூகநீதியை அழித்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் புகுத்த நினைக்கிறார்கள் இவ்வாறு கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!