ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கல்வியில் எப்படியாவது காவியை புகுத்திவிட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தின் படியே செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில்தான் பல்கலைக்கழக துணை வந்தர்களாக ஆர்.எஸ்.எஸ் ஆட்களை உள்ளே நுழைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் UGC – யின் புதிய விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கல்வி உரிமையையும், சமூக நீதியையும் அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட தி.மு.க மாணவர் அணியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், UGCயின் வரைவு அறிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தை முன்றுகையிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நம்மிடமிருந்து கல்வியை பறிக்க துடிக்கும் RSS – பா.ஜ.கவை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”நாட்டின் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தனது ஆட்களை துணை வேந்தர்களாக நியமித்து இந்தியாவின் கல்விமுறையை தனது கட்டுப்பாட்டில் எடுத்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து வருகிறது RSS. கல்வி துறையை RSS பறித்து வருவது பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவரது கவலை எல்லாம் அதானி, அம்பானியின் செல்வங்களை பாதுகாப்பதில் மட்டுமே உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக போராடி RSS – பா.ஜ.கவை தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.