தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் அண்மையில் பேசுபொருளான நிலையில், நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்த தேர்தல் அறிக்கை முக்கியமான ஐந்து ‘நீதித் தூண்கள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு அவற்றின் கீழ் 25 உத்தரவாதங்களை கொடுத்துள்ளது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தேர்தல் அறிக்கையானது ‘ஐந்து நியாயங்களை’ முக்கியத் தூண்களாகக் கொண்டிருக்கிறது. அதில் ‘இளைஞர் நீதி’, ‘மகளிர் நீதி’, ‘விவசாயிகளுக்கான நீதி’, ‘தொழிலாளர் நீதி’ மற்றும் ‘சமூக நீதி’ உள்ளிட்ட ஐந்து நீதித் தூண்கள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் அமைந்துளள்து. 2024 மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணிகளில் ஒப்பந்தப் பணிகளை ரத்து செய்து, அத்தகைய நியமனங்களை முறைப்படுத்த காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
மேலும், சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைத்தபடி, ஒவ்வொரு ஆண்டும் அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்.
“ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்தை உடனடியாக மீட்டெடுப்போம்” என்று கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்பு உள் கட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற மறுகட்டமைப்புப் பணிகள் மூலம், நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படும்.
அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்து, ஆயுதப் படைகளுக்கு வழக்கமான ஆள்சேர்ப்பு முறை தொடங்கும் என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400க்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளிப்பதாக கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில், பாஜகவில் இணைந்த பிறகு சட்டத்தில் இருந்து தப்பித்துள்ள நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்.
நீட் தேர்வு கட்டாயமல்ல என்றும், நீட் தேர்வு, க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் தேவைப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களில் உள்ள மூத்த பெண்மணிக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கை, மாநில அரசிகளிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
“ஆவாஸ் பாரத் கி” (awaazbharatki.in) என்று அழைக்கப்படும் ஆன்லைன் இணையதளம் மூலமாக மக்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பெறப்படும்.
“அறிக்கையில் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவை கண்டிப்பாக செயல்படுத்தப்படும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிப்பதற்கு முன், இந்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய ஆழமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது” என்று கார்கே கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









