12.08.2018 ஞாயிற்று கிழமை அன்று மதியம் 3 மணியளவில் திருவண்ணாமலையில் லோட்டஸ் அரங்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் *C D மெய்யப்பன் தனது காங்கிரஸ் நண்பர்களை சந்தித்து கட்சி வளர்ச்சிக்காக ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்த ஆலோசணை செய்தார்.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வருகை தந்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நிறைவுரை வழங்கிய CD மெய்யப்பன் வரும் பாராளுமன்ற தேர்தலில் இளம் தலைவர் ராகுல் காந்தி பாரத பிரதமராக பதவியேற்க தமிழகத்தின் பங்களிப்பான 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற பூத் கமிட்டியை முழுமை பெற. செய்து செயல் பட செய்திட தங்களை முழுமையாக அர்பணித்திட கேட்டு கொண்டார்.
மேலும் மாவட்ட தலைவர் செங்கம் குமார், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் செயல்பாடுகள் குறித்து பேசினார். இதில் செந்தமிழ் அரசு, அருள் அன்பரசு Ex MLA, வேலூர் கிழக்கு மாவட்ட OBC துறை தலைவர் K S ரவி, மேற்கு மாவட்ட தலைவர் K S குமார், மண்டல அமைப்பாளர் கா. பரந்தாமன் உட்பட தமிழகம் முழுவதுமிருந்து பல நிர்வாகிகள் வருகை தந்தனர்.
தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்



You must be logged in to post a comment.