நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த 4 கோடி பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய மாட்டார்கள்;-செல்வப்பெருந்தகை பேட்டி..

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-நெல்லைக்கு வரும் ராகுல் காந்தி ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலமாக பெல் பள்ளி மைதானத்திற்கு வந்து சேர்கிறார். அப்போது ரோடு-ஷோ நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஓட்டல்களில் பறக்கும் படை சோதனை மற்றும் ரெயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய மாட்டார்கள்.சாதாரண வேட்பாளர்களை, நோஞ்சான் வேட்பாளர்களை தான் துன்பப்படுத்துவார்கள். அதுதான் பா.ஜ.க.வின் ஸ்டைல்.எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்க பா.ஜனதாவினர் வருகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் தான் தற்போது ஓட்டு கேட்க வரும்போது பா.ஜ.க.வினர் கூனி குறுகி போய் நிற்கின்றனர். பண மதிப்பிழப்பு செய்தது வேடிக்கையான ஒன்று. தமிழர்களின் உரிமைகளை பா.ஜ.க பறித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன் கொல்லைப்புறமாக அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.பா.ஜ.க.வினரின் சர்வாதிகாரம் மேலோங்கி நிற்கிறது. பாசிசம் ஒழிய வேண்டும். ஜனநாயகம் மலர வேண்டும். சர்வாதிகாரம் வீழ வேண்டும். அதற்கு இந்த தேர்தல் பதில் சொல்லும் என்று நம்புகிறோம். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!