மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்-தென்காசி மாவட்ட காங்கிரஸ் அறிவிப்பு…

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தலின் படி 29ம்தேதி நாளை மாவட்ட முழுமைக்கும் மத்திய மாநில அரசை கண்டித்தும், பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் கொடுரமான விலை ஏற்றத்தை கண்டித்தும், வட்டார நகர பகுதிகளில் கொரனா சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தென்காசி மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் கூடும் மக்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கையெழுத்து படிவங்களை அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் பிசிசி உறுப்பினர் நாகராஜன், நகராட்சி காங்கிரஸ் தலைவர்கள் .சமுத்திரம் ,.பால்ராஜ், உமா சங்கர், ராமர், வட்டார தலைவர்கள் முஸ்தபா, செந்தூர் பாண்டியன் , சுந்தராஜ் ,  முருகையா , ஐயாத்துரை , முருகன் ,மாணிக்கம் , வேலுச்சாமி , ரத்தினம் மற்றும் மாநில பேச்சாளர்  பால்துரை , மாநில ஊடக பிரிவு சிங்கராஜ் , அமைப்பு சாரா அணி தலைவர் பிரபாகர் ,மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் தலைவர் முருகையா, பால் [எ] சண்முகவேல் மாவட்ட செயலாளர் சமுத்திரம், வட்டார செயலாளர் தெய்வேந்திரன் , ஊடக பிரிவு பாண்டியாபுரம் தங்கம், ஐஎன்டியூசி  நகர பொறுப்பாளர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!