இலங்கை கடற்படையால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் – வீடியோ பதிவு..

இலங்கை கடற்படை சிறைபிடித்து சேதமடைந்த படகுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கக் கோரி காங்கிரஸ் சார்பில் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக விசைப்படகுகள் சேதமடைந்த நிலையில் அந்நாட்டு கடற்கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி கேரள மாநில காங்கிரஸ் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பிரதாபன் தலைமையில் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவ மக்கள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!